காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் திருநள்ளார் அதிகம் வருகின்றன. தற்போது 4 நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வருகைப்புரிந்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது. இதில் திருநள்ளாறு மெயின் ரோடு மற்றும் வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், நீர்மோர், பிஸ்கட், உணவுப்பிரசதம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது.