நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் நீர், விபூதி, புஷ்பம், தேன், திருமஞ் சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் எழுந்த ருளிய அம்மனுக்கு பல்வேறு வகை பழங்களால் ஆன மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர். காலை முதல் இரவு வரை திரளானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.