திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2019 12:08
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு சிறப்பு வழி பாடு நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் படைப்பு கடவுளான பிரம்மாவிற்கு தமிழ் மாத பிறப்பு அன்று ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு கோவிலின் கருவறை வெளிச் சுவற்றின் வெளிபுறத்தில் உள்ள பிரம்மாவிற்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஷோடசோபவுபசார தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.