பதிவு செய்த நாள்
24
ஆக
2019
02:08
ஆனைமலை : ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்போருக்கு, ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனைமலையில், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் ஆலோ சனை கூட்டம் நடந்தது. விஷ்வ இந்து பரிஷித், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, உலக நல வேள்விக்குழு ஆகிய அமைப்பினர் பங்கேற்றனர்.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், முருகேசன், எஸ்.ஐ., கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.போலீசார் பேசியதாவது: நடப்பாண்டு, வரும் செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சிலைகள் வைக்க, கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்து அமைப் பினர் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். சிலைகள் அமைக்கப்படும் பந்தல், எளிதில் தீப்பற்றாத தகர மேற்கூரையில் அமைத்து, அருகில் தீயணைப்பு சாதனங்கள் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட தினத்தில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையிலும் சிலைகள் அமைக்கக்கூடாது.உள்ளாட்சி அமைப்பு, போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்புத் துறையில் அனுமதி பெற்று சிலைகள் வைக்க வேண்டும். நடப்பாண்டுக்கு ஆனைமலை, ஆழியாறு, கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், 160 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.