திருவாடானை : திருவாடானை சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள காளி, முருகன், மீனாட்சி கோயில் விழா நடந்தது.சுவாமி படங்கள் முன்பு மாவிளக்கு வைத்து நரிக்குறவர்கள் வணங்கினர். அதனை தொடர்ந்து ஏராளமானோர் பால்குடம்எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்பு காளிக்கு சிறப்பு பூஜைகள் செய்த நரிக்குறவர்கள் எருமை கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். அன்ன தானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.