ஆர்.கே.பேட்டை பவானியம்மன் கோவில் திருப்பணி, ’விறுவிறு’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 03:08
ஆர்.கே.பேட்டை : பாண்டரவேடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கட்டுமான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.பள்ளிப்பட்டு அடுத்த, பாண்டரவேடு கிராமத்தின் மேற்கு பகுதியில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கட்டுமான பணி, ஓராண்டாக நடக்கிறது. தற்போது பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பவானியம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், தங்களின் பங்களிப்புடன் இந்த கோவிலை நிர்மானம் செய்து வருகின்றனர்.
அர்த்த மண்டபம், கருவறை, கோபுர விமானம் உள்ளிட்டவை, முழு வடிவம் பெற்றுள்ளன. கோவில் சுற்று வளாகம் மற்றும் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.