பதிவு செய்த நாள்
28
ஆக
2019
01:08
சத்தியமங்கலம்: வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த, கோவில் சுற்றுச்சுவரை சீரமைக் காமல், மெத்தனம் காட்டுவதாக, பக்தர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரையில், பழமை வாய்ந்த, பவானீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில், ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரை யோரம் இருந்த வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்போது பவானீஸ்வரர் கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
ஓராண்டாகியும், சுற்றுச்சுவர் கட்ட, கோவில் நிர்வாகத்தினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, பக்தர்கள் தரப்பில், வேதனை எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சுவரை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.