கோபி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணியினருடன், கோபி போலீசார் நேற்று 27ம் தேதி ஆலோசனை நடத்தினர். டி.எஸ்.பி., கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என, 20 பேர் பங்கேற்றனர். கோபி சுற்றுவட்டார பகுதியில், விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலம் நடத்துவதில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறை மற்றும் நிபந்தனைகள் குறித்து, போலீசார் அறிவுறுத்தினர்.