பதிவு செய்த நாள்
29
ஆக
2019
03:08
கரூர்: கரூர் அருகே, தரகம்பட்டி சுந்தரபாண்டியன் குளத்தில், சிமென்டால் செய்யப்பட்ட, மூன்று அம்மன் சிலைகள் நீரில் மூழ்கி கிடந்துள்ளன. அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர், சிலைகளை பார்த்தவுடன், வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, வருவாய் ஆய்வாளர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர், அங்கு சென்று சிலைகளை பார்வையிட்டனர். பின், அந்த சிலைகளை ஆய்வுக்கு எடுத்து சென்று உள்ளனர். மேலும், சிலையை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சோதனை செய்தபின்பே அதுகுறித்து கூற முடியும் என, அவர்கள் கூறினர்.