சூலுார்: காங்கயம்பாளையம் ஏர்போர்ஸ் காலனி, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷே கம் நடந்தது.
சூலுாரை அடுத்த காங்கயம்பாளையம் ஏர்போர்ஸ் காலனி, அமர்ஜோதி சப்தகிரி நகர். இங்கு, பிருந்தாவன் கார்டனில் உள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, 24ம்தேதி மாலை, 5:00 மணிக்கு வழிபாட்டுடன் துவங்கியது. மாலை, முதல் காலசந்தி ஹோமம், தீபாராதனை முடிந்து, அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.
மறுநாள் காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், பூர்ணாஹுதி முடிந்து, புனித நீர் கலசங்களை, சிவாச்சாரியர்கள் சுமந்து கோவிலை வலம் வந்தனர். காலை 6:30 மணிக்கு விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.