உசிலம்பட்டி: வாலாந்துார் அருகே நாட்டாபட்டியில் அங்காள பரமேஸ்வரி, செல்வ விநாயகர், வாலகுருநாதசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை ஆக., 30ல் துவங்கியது. நேற்றுமுன்தினம் செப்., 1 ம் தேதி கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. மாலையில் 108 விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.