வெள்ளகோவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 03:09
வெள்ளகோவில்:வெள்ளகோவில் காமராஜபுரம், ராஜிவ் நகர், மணியகாரன் பேட்டை, வட்ட மலையார் தோட்டம் உட்பட பல பகுதிகளில் நேற்று 2ல் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு நடந்தது.ராஜிவ் நகரில் குழந்தைகள் முதல் முதியோர் வரை பங்கேற்ற பல விளையாட்டு போட்டி நடத்தி, பரிசளிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, அந்தந்த பகுதி பக்தர்கள் செய்தி ருந்தனர். பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த காமராஜபுரம் விநாயகர் உட்பட இரண்டு சிலை, காவிரி ஆற்றில், நேற்று மாலை விசர்ஜனம் செய்யப்பட்டது.