பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
பல்லடம்:விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பினர், சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். பண்டிகை சிறப்பாக கொண் டாடப்படுவது ஒருபுறம் இருந்தாலும், அது அமைதியாகவும், இடையூறு இன்றியும் நடக்க, போலீசாரின் பங்களிப்பு மிக அவசியம்.பல்லடம் உட்கோட்டத்தில், 450 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அவை, ஒரு சில தினங்களில், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. பிரச்னைக்குரிய இடங்களில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, அதிக எண்ணிக்கையில், போலீசார் நியமிக் கப்பட்டிருந்தனர். சிலை பிரதிஷ்டை முதல், விசர்ஜனம் செய்யும் வரை, போலீசாரின் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால், போலீசார் இரவு, பகல் பாராமல், விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.