ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோவில் முளைப் பாரி விழா செப்.,2 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அன்று முதல் தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று 11ல், முளைப்பாரிகளை கோவிலில் இருந்து பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்று அரசூரணியில் கொட்டி நேர்த்தி கடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை வள்ளுவர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.