திருச்சி – சென்னை செல்லும் சாலையில் 48 கி.மீ., தொலைவில் உள்ள தலம் சிறுவாச்சூர். இங்குள்ள மதுரகாளியம்மன் ஆதிசங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதாகும். திங்கள், வெள்ளி மட்டும் கோயில் திறந்திருக்கும். இந்த அம்மனை கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாக சித்தர்கள் பூஜிப்பதாக ஐதீகம்.