பதிவு செய்த நாள்
19
செப்
2019
12:09
கமுதி : கமுதி அருகே பருவமழை பெய்ய வேண்டியும், விவசாயிகளுக்கு உடல் ஆரோக்கி யம் பெற்று, விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என, சேத்தாண்டி வேடமணி ந்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே உள்ள செங்கப்படை, அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், செண்டை மேளம் முழங்க, தங்களது உடல் முழுவதும் களிமண் சகதியை பூசிக்கொண்டு, அடையாளம் தெரியாதவாறு வினோதமான முறையில், சேத்தாண்டி வேடமணிந்தும், அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, கரும்பாலை தொட்டில்கள் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: விவசாயிகளுக்கு இந்த ஆண்டு போதிய மழை பெய்து. விவசாயிகளுக்கு நல்ல ஆரோக்கியம் பெற்று, அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற் காக, கடந்த நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, செங்கப்படை அழகுவள்ளியம்மனுக்கு, இது போன்று, சேத்தாண்டி வேடமணிந்து, வினோத நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகிறோம், என்றனர்.