ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. ஆண்டிபட்டி வட்டார விஸ்வகர்ம இளைஞர் பேரவை சார்பில் நடந்த விழாவில் , அனைத்து விஸ்வகர்ம சங்க மாவட்ட தலைவர் ராசாமணி கொடியேற்றி வைத்தார்.
கம்மவார் கவின் கலை இலக்கிய சங்கம் சார்பில் குருஜெயசந்திரன், விஸ்வகர்மா இளைஞர் எழுச்சி இயக்க அவைத்தலைவர் ரவி, வழக்கறிஞர் கணேசன் வாழ்த்தி பேசினர். ஆண்டிபட்டி வட்டார விஸ்வகர்ம சங்க தலைவர் மாசாணம், அரசு வழக்கறிஞர் குமார் ஆகியோர், ஊர்வல த்தை துவக்கி வைத்தனர். சக்கம்பட்டி, ஆண்டிபட்டி மெயின் ரோடு வழியாக ஊர்வலம் சென்று காமராஜர் நகரில் முடிந்தது. ஏற்பாடுகளை இளைஞர் பேரவை தலைவர் மணிகண்டன், செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராமச்சந்திரன் உட்படநிர்வாகிகள் செய்திருந்தனர்.