பதிவு செய்த நாள்
20
செப்
2019
01:09
சூலுார் : அருகம்பாளையம் சித்தி விநாயகர், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக த்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலுார் அடுத்த அருகம்பாளையம் சித்தி விநாயகர், கரிவரதராஜ பெருமாள் கோவில், மாகாளி யம்மன், அய்யாசாமி கோவில் பழமையானவை. இக்கோவில்களில், கோபுரத்துக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.
கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங் கியது. நான்கு கால யாகங்கள், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 16ம் தேதி காலை, 6:30 மணிக்கு, சித்தி விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார த்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.