பதிவு செய்த நாள்
20
செப்
2019
01:09
கரூர்: க.பரமத்தி, கடை வீதியில் ஈஸ்வரன் கோவில் பின்புறம், ஏழு ஏக்கர் பரப்பளவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இது நீண்ட நாட்களாக பராமரி க்கபடாமல் இருந்து வந்தது. இந்த குளத்தை கரூர் ரோட்டரி சங்கம், க.பரமத்தி ரோட்டரி சமுதாய அணி, ஊர் பொதுமக்கள் ஆகியோர் சார்பில், குளத்தை தூர் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா தொடங்கி வைத்து பேசியதாவது: மாவட் டத்தில், 434 குளங்கள், 67 குறு பாசன குளங்கள், 367 குளம் குட்டை ஊரணிகள் சர்வே செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் நிலை குளங்களை தூர்வாரி மரக்கன்று நட்டு பாதுகாக்கப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில், 2.40 லட்சம் பனை விதைகள் தயாராக உள்ளது. பல்வேறு ஊர்களில் உள்ள குளத்தை தூர் வாருவதற்கு, உள்ளூர் பிரமுக ர்கள் முன் வர வேண்டும். குளங்களை குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்தக்கூடாது.
பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்திராணி, பழனிகுமார், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.