பதிவு செய்த நாள்
21
செப்
2019
01:09
பொங்கலுார்:பொங்கலுார் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில், இன்று 21ல், புரட்டாசி சனிக் கிழமை வழிபாடு நடக்கிறது.இக்கோவிலில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்கின்றனர்.
கூட்ட நெரிசலை சமாளிக்க, சவுக்கு கம்புகள் வரிசையாக கட்டப்பட்டு, பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்று, வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை, 5:00 மணி க்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.பக்தர்களின் வசதிக் காக, திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கோவிலுக்கு அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக் கப்படுகிறது.
டூவீலர் மற்றும் கார்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக, பல இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள், திருப்பூர் தாராபுரம் ரோடு ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரிக்கு அருகில் செல்லும் ரோடு, கோவை திருச்சி ரோடு சுங்கம் அருகி லுள்ள ரோடு வழியாகவும் செல்லலாம். அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
* பெருந்தொழுவு, பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, அர்ச்சனை, தீபாராதனை, 11:00 மணிக்கு அபிஷேகம், சுவாமி திருவீதி உலா, அன்ன தானம் நடக்கிறது.
* கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், காட்டூர் சென்றாய பெருமாள் கோவில், புத்தரச்சல் சோழீஸ்வரசுவாமி கோவில், குள்ளம்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வசதிக் காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.