பதிவு செய்த நாள்
21
செப்
2019
01:09
திருப்பூர்:பெங்கால் கலாச்சார மையத்தின், துர்காபூஜைக்காக, கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள கலைஞர்கள், துர்கா சிலை வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் உள்ள, பெங்கால் கலாசார மையம் சார்பில், ஸ்ரீதுர்காபூஜை மகா உற்சவம், அக்., 4ல் துவங்கி, 8 ம் தேதி வரை நடக்கிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு, சவுடாம்பிகை திருமண மண்டபத்தில், ஐந்து நாட்கள், மேற்குவங்க கலாச்சாரத்துடன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.வடமாநிலங்களை போல், துர்கா, விநாய கர் உள்ளிட்ட சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில், 11ம் ஆண்டு துர்கா பூஜை மகா உற்சவத்தை முன்னிட்டு, கொல்கத்தாவில் வந்துள்ள கலைஞர்கள், சிலைகள் வடிவமை க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தினமும், காலை 8:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலையில் கொண்டாட்டங்களும் நடக்கின்றன.
அக்.,13ம் தேதி ஸ்ரீலட்சுமி பூஜையும் நடக்கிறது. சிலை வடிவமைப்பாளர்கள் கூறுகை யில்,’ ஆண்டுதோறும் துர்கா பூஜைக்காக, சிலைகள் வடிவமைத்து, அலங்கரிக்கப்படுகின்றன. கங்கை ஆற்று மண், வைக்கோல், மரக்குச்சிகளை கொண்டு சிலை வடிவமைக்கப்படும். ஆடை ஆபரணங்கள் அணிவித்து, அலங்கரிக்கப்படும். வழிபாட்டுக்கு பிறகு, சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்படும்,’ என்றனர்.