சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோவில் செயல்அலுவலர் கருணாகரன், விருதுநகர் உதவி ஆணையர் கணேசன், கோவில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டதில் கடந்த ஒரு மாதத்தில் காணிக்கையாக ரூ.36,56,999, 133 கிராம் தங்கம், 665 கிராம்வெள்ளி செலுத்தியிருப்பது தெரியவந்தது. காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் பள்ளி மாணவர்கள், கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.