Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் தேவாரத்திருமுறை ... இருக்கன்குடி கோயில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநியில் உருவாகிறது பிரம்மாண்ட கொலு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2019
03:09

வடபழநி: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகி வருகின்றனர், சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்படுகிறது.


Default Image
Next News


நவராத்திரி விழா, வடபழநி ஆண்டவர் கோயிலில் வருகின்ற 29 ந்தேதி துவங்கி அக்டோபர் மாதம் 8 ந்தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.சக்தி கொலுவில் இடம் பெற மக்களிடம் இருந்து கொலு பொம்மைகள் வரவேற்கப்பட்டன கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஏாராளமான பொம்மைகளை கொடுத்துள்ளனர். மக்கள் கொடுத்த பொம்மைகளுடன் பிரபலமான பொம்மை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கிய பொம்மைகள் என்று ஆயிரக்கணக்கில் பொம்மைகள் குவிந்துவிட்டன.

நவராத்திரி நாயகியான மகிசாசூரமர்த்தனை காளி வதம் செய்யும் காட்சி முதல் காஞ்சியை கலக்கிய அத்தி வரதர் வரை விதம் விதமான சுவாமி பொம்மைகள் நிறைந்துள்ளன. இந்தக்கால இளைய சமுதாயம் நமது கலாச்சாரம் பண்பாட்டை தெரிந்து கொள்ளும் வகையில் திருமண செட் என்று சொல்லக்கூடிய திருமண சடங்குகளை சொல்லும் பொம்மைகளும்,பெரியவர்களுக்கு விளக்கம் தரக்கூடிய வகையில் திருவிழா பொம்மைகளும்,குழந்தைகளை கவரும் விதத்தில் பறவைகள் விலங்குள் பொம்மைகளும் என அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் நவராத்திரி கொலு பிரம்மாண்டமாய் உருவாகிவருகிறது. நவராத்திரி கொலுவை முன்னிட்டு கேரளா கலைஞர்களின் கைவண்ணத்தில் கோயில் முழுவதும் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு வருகின்றது மேலும் கொலுவை பார்வையிட வரும் பாடத்தெரிந்த பக்தர்கள் விரும்பினால் பாடுவதற்கான மேடையும் அமகை்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அருள்பாலி்ப்பார் ஆகவே நவராத்திரி நாள் முழுவதும் பக்தர்கள் வருகைதந்து அனைத்து அலங்காரத்தையும் தரிசித்து அம்மன் அருள் பெற வேண்டுமாய் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.அந்த அலங்காரத்தின் மகிமையை எடுத்துச் சொல்லும் விதத்தில் நட்சத்திர பேச்சாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும் நாள்தோறும் நடக்கிறது. இத்துடன் இன்னும் சிறப்பு நிகழ்வாக ஏகதின லட்சார்ச்சனையும்,வித்யாரம்பம் நிகழ்வும் நடைபெறுகிறது.இந்த நவராத்திரி வடபழநி ஆண்டவருக்கு மட்டுமல்ல வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கொண்டாட்டம் கூடுதலாகவே இருக்கும்.

நவராத்திரி துவக்க நாளான்று சிறப்பு நிகழ்வாக திருக்கயிலாய வாத்தியம் முழங்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான இந்த கயிலாய வாத்தியம் சமீப காலமாக சிவன் கோவில்களில் இசைக்கப்படுகிறது. கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என்றழைக்கப்படும் இந்த பழமையான இந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் சிவாலயங்களிலே ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக்கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்று காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள்தான் இவை.அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தி இசைக்கப்படும் இந்த திருக்கயிலாய இசை கேட்க மிகவும் நன்றாக இருக்கும் இசைக்கப்படும் இடத்தையே அதிர வைப்பதுடன் இசை கேட்கும் யாரையும் அசைத்துப் பார்த்துவிடும்.

சென்னையில் உள்ள இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறை மன்றத்தினர் ஒவ்வாரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை பழமையான சிவன் கோயிலில் உழவாரப்பணி செய்வது வழக்கம், இதுவரை 216 கோயில்களில் உழவாரப்பணி செய்துள்ளனர். இந்தப் பணியை செய்யும் முன்பாக கோவிலைச் சுற்றி கயிலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்று ஆன்மீக விழிப்புணர்வை நிகழ்த்துவர்.எஸ் .கணேசன் தலைமையிலான இந்தக்குழுவினரின் கயிலாய இசை வடபழநி ஆண்டவர் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவின் துவக்கத்தை முன்னிட்டு வருகின்ற 29 ந்தேதி மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு நிகழ்வாக நடைபெறுகிறது.

-எல்.முருகராஜ்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் யாக பூஜை செய்து கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகருக்கு 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar