பதிவு செய்த நாள்
28
செப்
2019
02:09
கோபி: புரட்டாசி வெள்ளியை ஒட்டி, கோபி கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோபி அருகே, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், புரட்டாசி வெள்ளியை ஒட்டி, நேற்று 27ல், காலை முதலே, பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது.
அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், நெய் தீபமேற்றி பெண்கள் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள வாராஹியை, கன்னி பெண்கள் முதல், சுமங்கலி பெண்கள் வரை வழிபட்டு சென்றனர். கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், பச்சமலை மற்றும் பவளலை முருகன் கோவில்களில், வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.