இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில்நவராத்திரி விழா செப்., 29ல் தொடங்கி அக்.10 வரை நடக்கிறது. ஞாயிறு மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை, சந்தன அலங் காரம், விசேஷ பூஜையுடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து தினமும் மாலை கும்பம் வைத்துசிறப்பு சந்தன அலங்கார பூஜை நடைபெறும்.அக்.1 செவ்வாயன்று சங்காபிஷேகம் நடைபெறும். சரஸ்வதி பூஜையன்றும், விஜய தசமியன்றும் வெள்ளிஅங்கி சாத்தி சந்தன அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறும்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செய்து வருகிறார்.