ராசிபுரத்தில் நவராத்திரி விழா: தசாவதாரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2019 03:09
ராசிபுரம்: நவராத்திரி விழாவையொட்டி, ராசிபுரத்தில் தசாவதாரத்தில் பெருமாள் அருள்பாலித் தார். ராசிபுரத்தில் நவராத்திரி விழா தொடங்கியது. பல்வேறு அமைப்பு, தனியார் பள்ளிகளில் நவராத்திரி தொடக்க விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைத்துள்ளனர். பெரிய கடை வீதி அகரமஹாலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு, பெருமாள் சுவாமி, தசாவதாரம் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஒவ்வொரு சுவாமியும், எட்டு அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. நேற்று 29ல், காலை, 4:00மணிக்கு சிறப்பு பூஜை தொடங்கியது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
* அமாவாசை என்பதால், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன், புதுப்பட்டி துலுக்க சூடா மணியம்மன், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புரட்டாசி, இரண்டாவது சனிக்கிழை என்பதால் நைனாமலைக்கு பக்தர்கள் அதிகம் சென்றனர். ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.