கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோவில்களில் நவராத்திரி உற்சவம் நேற்று 29ல் துவங்கியது. கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் 9 படிகள் அமைத்து கொலு பொம்மைகள் வைத்துள்ளனர். மாலையில், லஷ்மி தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கின்றனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புண்டரீக வள்ளி தாயார், சிதம்பரேஸ்வரர் சிவன் கோவிலில் பராசக்தி அம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கச்சிராயபாளையம் சாலையில் கங்கையம்மன், அண்ணா நகரில் விஷ்ணு துர்க்கையம்மன் கோவில்களில் அபிஷேகங்கள் செய்து வைக்கப்படுகிறது.
அதன்பின் நவசக்தி அம்மன்களை குறிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார ங்கள் செய்கின்றனர். 16 வகையான அலங்கார தீபங்கள் காண்பிக்கப் படுகிறது.நேற்று 29ல் முதல் தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 10வது நாள் அம்மன் அம்பு எய்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.