பதிவு செய்த நாள்
01
அக்
2019
03:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரியை யொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் (செப்., 29ல்), நடந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு பெண்கள் பஜனை பாடல்களை பாடினர்.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி மஞ்சள் அம்மன் சன்னதியில் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் துர்காதேவி அலங்காரத்தில் விநாயகப் பெருமானுடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நெகமம் - பல்லடம் ரோடு, மரகதாம்பிக்கை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவிலில், நவராத் திரி விழாவை முன்னிட்டு, கொலு பூஜை நடக்கிறது.நேற்று முன்தினம் (செப்., 29ல்), பச்சை பட்டு உடுத்தி, மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று (செப்., 30ல்), பண்ணாரியம்மன் அலங்காரத்திலும், இன்று, காமாட்சியம்மன் அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார்.தொடர்ந்து, சரஸ்வதி, அத்திவரதர் என, நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு அவதாரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு பிரசாதத்துடன், அபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.