’வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வாசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். கிருஷ்ணர் பிறக்கும் முன்பே, வாசுதேவன் என்னும் பெயர் வழக்கத்தில் இருந்தது. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கடைசியில் உள்ள பலச்ருதியில் (பலன் கூறும் பகுதி) “ எல்லா உயிர்களிலும் வசிக்கும் வாசுதேவனாகிய உனக்கு நமஸ்காரம்” என்று உள்ளது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மர். விஷ்ணு பக்தனான பிரகலாதன் தன் நண்பர்களுக்கு பேசும் போது, மகாவிஷ்ணுவை ’வாசுதேவன்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறான்.