Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்கும் அறிவொளி பரவட்டும்! காளியைத் திட்டிய கவிஞன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தோற்றம் கண்டு முடிவு செய்யாதீர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
04:10

ஒரு பெண்ணுக்கு கோபம் வந்தால், அவளிடம், “ஏன் காளி மாதிரி ருத்ரதாண்டவம் ஆடுறே!” என்று கேலி செய்வார்கள். தோற்றத்தில் வேண்டுமானால் காளியிடம் கடுமை தெரியும். உண்மையில், அவள் கருணைக்கடல். நம்பியவர்களைக் கைவிட மாட்டாள்.இதோ ஒரு கர்ண பரம்பரைக் கதை.உஜ்ஜயினி நகரில் உயர்குலத்தில் பிறந்த ஒரு சிறுவன், சூழ்நிலை காரணமாக ஆடுமேய்ப்பவர் இல்லத்தில் வளர்ந்தான். பெரியவன் ஆனதும்,அவனும் ஆடு மேய்க்கும் தொழிலையே செய்தான்.


அவன் வாழ்ந்த ஊரில் வசித்த ஒரு ஆசிரியரிடம் ஒரு இளவரசி படித்தாள். அரண்மனை வாழ்வு தந்த ஆணவத்தால், அவள் ஆசிரியரையே மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக, ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு அவளை மணம் முடிக்க ஏற்பாடு செய்துவிட்டார்.இளவரசி கலங்கவில்லை. அவள் காளி பக்தை. மகாகாளியிடம் தன் ஆணவத்துக்கு மன்னிப்பு கேட்ட அவள், தன் கணவனை மிகச்சிறந்த அறிவாளியாக்க வேண்டி விரதமிருந்தாள். தன் கணவனுக்கு காளி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தாள். அவனும் அம்மந்திரத்தைச் சொல்லி காளியின் நேரடி தரிசனம் பெற்றான். அவனை உலகம் போற்றும் புலவராக்கினாள் காளிதேவி. அவரே மகாகவி காளிதாசர்.காளியின் தோற்றம் கடுமையானது தான். அதைக் கொண்டு அவளை <உக்கிர தெய்வமாகக் கருதி ஓடக்கூடாது. அவளது கருணையைப் பெற யாசிக்க வேண்டும். நவராத்திரி காலத்தில் அவளை அவசியம் வணங்கி வாருங்கள்.தேசத்தை ஆபத்து சூழ்ந்துள்ள இந்நேரத்தில் ‘ஓம் காளி’ என்ற மந்திரம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.


பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

என்ன மாதம் என்ன பலன் செப்டம்பர் 24,2026

மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும்.  11, 21, 54, 108 நாட்கள் ... மேலும்
 

மவுன விரதம் இருங்க... செப்டம்பர் 24,2026

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் ... மேலும்
 

ஏழு வகை சிவலிங்கம் செப்டம்பர் 24,2026

சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், ... மேலும்
 

அமாவாசை அபிஷேகம் செப்டம்பர் 24,2026

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 

குடும்ப பிரச்னை தீர... செப்டம்பர் 24,2026

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar