அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே பிள்ளையார்நத்தம் மந்தை காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சக்தி கரகம் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.