கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே 18 சுக்காம்பட்டி ஹரிஹர புத்திர அய்யனார் கோயிலில் மழை பெய்ய வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கிராமத்தினர் சார்பில் புரவிகள் மந்தையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில்உள்ள நாட்டார்மங்கலம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தன.