கமுதி: கமுதி - அருப்புகோட்டை வழியில் அய்யனார்குளம் அரிகேசவ வழிவிட்ட அய்யனார் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, பிராமண போஜனம், சிறப்பு யாகசாலை பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டது. பின் கடம் புறப்பாடு, புனித நீர் வழிவிட்ட அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அரிகேசவ வழிவிட்ட அய்யனாருக்கு யாக சால பூஜைகள், மற்றும் சிறப்பு அபிஷேகத்தை, கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் குருக்கள் சந்தரு, கார்திக் குருக்கள் செய்தனர். குலதெய்வ பூர்வ குடிமக்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.