அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே பண்ணைகுடியில் மந்தையம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. சக்தி கரகம் அலங்கரித்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மனுக்கு பொங்கல் வைத்து, சக்தி கிடாய் வெட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கறி பிரசாதம் வழங்கப்பட்டது. வர்ணகுதிரைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இருப்பிடம் சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.