விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2019 01:10
சிவகங்கை, : சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது. காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முருகனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை செய்யப்பட்டது. சிவகங்கை சிவன் கோயிலில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு காப்பு கட்டப்பட்டது.