பதிவு செய்த நாள்
31
அக்
2019
03:10
செஞ்சி: செஞ்சி அடுத்த அத்தியூர் கிராமத்தில் உள்ள பூரணி, புஷ்கலா உடனாகிய ஆகாச ஐயனாரப்பன் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று 30ல், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 29ம் தேதி காலை குருவந்தனம், திருவிளக்கு, கிராம தேவதை, விநாயகர் வழிபாடு நடந்தது.
மாலை 5:00 மணிக்கு திருமண் எடுத்தல், வாஸ்து தோஷம் கழித்தல், முதல் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று 30ல், காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி விசேஷ திரவிய ஹோமம் கூட்டு பிரார்த்தனையும்; 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:30 மணிக்கு பூரணி, புஷ்கலா உடனாகிய ஐயனாரப்பனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், தர்மகர்த்தா சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.