Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜசோழன் கட்டிய பழமையான கோவிலை ... கிணத்துக்கடவு காரணப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கிணத்துக்கடவு காரணப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 அக்
2026
10:10

கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.


மதுரையில், ஸ்ரீ சோமநாத அவதானி – பார்வதி அம்மாளுக்கு, 17ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். இறையருளுடன் ஞானியாக வாழ்ந்த இவர், கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் ஜீவ சமாதி அடைந்தார். கரூரில், புதுக்கோட்டை மன்னர் கட்டிய காசி விஸ்வநாதர் கோவிலில், அகண்ட ஜபமும், பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் வைதிக பூஜைகளும் நடந்து வருகின்றன.சிருங்கேரி சாரதா பீடத்தின், 33வது ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதி மஹ சுவாமிகள், 1908ம் ஆண்டிலும், 34வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள், 1925ம் ஆண்டு விஜயம் செய்தனர். 35-வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள், 1962ல் கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தார். தற்போதைய பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகள், தன் சீடரான ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளுடன், 2017ல் இந்த அதிஷ்டானத்தில் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.


சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பாக, ஸ்ரீமத் சிவானந்த மற்றும் சாரதா சந்திரா, நேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், ‘‘ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரை போன்ற ஆத்மஞானிகளை பூஜித்து சேவை செய்வதால், உலக மக்கள் நன்மைகள் அனைத்தையும் பெறுவர்,’’ என, அருளாசி வழங்கினார். சிவராஜு சிவாச்சாரியார், ஸ்ரீரெங்கநாதசுவாமி கோவில் அர்ச்சகர் சந்திரசேகர சிவாச்சாரியார், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் நாகேந்திரகுமார், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் கோவில் அர்ச்சகர் நெரூர் ஆகியோர், யாகசாலை பூஜைகளை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கார்த்திகேயன், சமய அலுவலர் ரஞ்சிதா முன்னிலையில், அதிஷ்டானத்தின் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம் மற்றும் அருள் பெரியசாமி ஆகியோர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். புதுக்கோட்டை தொண்டைமான் வம்சத்தின், சாருபாலா தொண்டைமான், காங்., – எம்.பி., ஜோதிமணி, திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ஹர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிம்மஸ்த கும்பமேளாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar