Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் சிவன் கோயில்களில் ... திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாவம் நீக்கி இறைவன் திருவடி அடையும் ஞானாம்பிகையை நெய்குளத்தில் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாவம் நீக்கி இறைவன் திருவடி அடையும் ஞானாம்பிகையை நெய்குளத்தில் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 அக்
2026
10:10

தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். இதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.


தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிவகணேச கந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாதத்தால் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த சிவபெருமானை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேவாரப் பாடல்களைப் பாடியும் வழிபட்டனர்.


பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வர், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கும், தையல் நாயகி அம்மன் கோயிலில் வைத்தீஸ்வருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிவன் அன்னாபிஷேகம், கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.- 


உத்தம பாளையம்: காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் மற்றும் நெய்க்குள தரிசனம் நடந்தது. காளாத்தீஸ்வரர் முன்னிலையில் 400 கிலோ அரிசியில் தயாரித்த அன்னம் படைத்தனர். சிவலிங்கம் முழுவதும் அன்னத்தை கொட்டி அபிஷேகம் செய்தனர். ஞானாம்பிகை முன் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என ஒன்றன் பின் ஒன்றாக படைத்து சர்க்கரை பொங்கலுக்கு மையத்தில் பள்ளம் ஏற்படுத்தி அதில் 25 லிட்டர் நெய் ஊற்றினர். ஞானாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவு செய்து அம்மன் பிம்பம் நெய்குளத்தில் தெரிந்ததை பார்த்தனர். நெய் குளத்தில் அம்மனை பார்ப்பதால், பாவங்கள் நீங்கி, மறுபிறவி எடுக்காமல் இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை.நெய்க் குள தரிசனம் முடிந்த பின் முல்லைப் பெரியாற்றில் அன்னம் கலக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்காளாத் தீஸ்வரர் சேவை அறக்கட்டளை, தென்காளஹஸ்தி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் அன்னதானம் நடந்தது. சுருளியாற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்திருந்தார்.


அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு: போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அன்னாபிஷேக அலங் காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மேலச்சொக்நாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், குலாலர்பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம் மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ர காளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: பட்டணம், காரணப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar