பதிவு செய்த நாள்
04
நவ
2019
03:11
திருத்தணி:திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம், கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், நான்காம் ஆண்டாக, கந்த சஷ்டி விழா, அக்., 28ம் தேதி துவங்கியது.விழா நிறைவு நாளான, நேற்று 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அலங்காரம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலிகந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளில், ஆறுபடை முருகன் கோவில்களில், ஐந்து கோவில்களில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் மட்டும், சூரசம்ஹாரம் பதில், புஷ்பாஞ்சலி நடைபெறும்.
காரணம், முருகப்பெருமான் போரிட்டு, திருத்ணிகை மலையில் சினம் தணிந்து, தெய்வானை யை திருமணம் முடித்தார். முருகப்பெருமான் சந்தோஷமாக இருந்ததால், சூரசம்ஹாரத்தி ற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. நேற்று, இவ்விழா சிறப்பாக நடந்தது.