செஞ்சி: செஞ்சி பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கிருஷ்ணாபுரம்: செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த 3 தேதி இரவு நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வேண்டி யாகம் நடந்தது.
பெரியகரம்: செஞ்சி பெரியகரம் சிவசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த 3 தேதி இரவு நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வேண்டி யாகம் நடந்தது.
பீரங்கிமேடு: செஞ்சி பீரங்கிமேடு பி.ஏரி முருகன் கோவில் முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த 3 தேதி இரவு நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வேண்டி யாகம் நடந்தது.
பெருவளூர்: மேல்மலையனூர் தாலுக்கா பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா 28ம் தேதி துவங்கி நடந்து வந்தது, தினமும் நவ வீரர்கள் மற்றும் சாமி வீதி உலா நடந்து வந்தது. 3ம் தேதி, காவடி ஆட்டமும், பழம் குத்துதலும், தபசு மாம் ஏறுதலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.