பதிவு செய்த நாள்
04
நவ
2019
03:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் கந்சசஷ்டி விழா அக்.28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. சுவாமி உள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. பின் சூரசம்ஹாரம் நிகழச்சி நடந்தது. சூரபதுமனை முருகன் சம்ஹாரம் செய்தார். பின் சுவாமிக்கு சிறப்புஅபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.நேற்று காலை 9:30 அபிேஷகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. பகல் 12:00மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி திருமணக்கோலத்துடன் வெளி வீதியுலா நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் காலை 10:00 மணிக்குதிருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வழிவிடு முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழச்சிநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பரமக்குடி: கந்த சஷ்டி விழாவில் பரமக்குடி முருகன் கோயில்களில், திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 28 ல் இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் முருகன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் சக்திவேல் பெற்று, மயில் வாகனத்தில் முருகன் வீதிவலம் வந்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு வைகை கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10:00 மணி முதல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். தொடர்ந்து வேத, மந்திரங்கள் முழங்க முருகன் தெய்வானை திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இரவு புஷ்பக விமானத்தில் வீதிவலம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பாரதி நகர் பால்பண்ணை முருகன் கோயிலில், சூரசம்ஹார நிகழ்ச்சியும், திருக்கல்யாணமும் நடந்தது.