அலங்காநல்லுார் அருகே பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2019 02:11
அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டியில் தர்ம சாஸ்தா, பாலவிநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், நான்கு கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சார்யார் கல்யாணசுந்தரம் தலைமையில் நேற்று காலை கடம் புறப்படாகி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர். சால்வார்பட்டி கன்னிமார், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்படுகளை ராஜ கம்பளத்தார் நாயக்கர் உறவின்முறையினர் செய்தனர்.
கொட்டாம்பட்டி கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி வேலாயுதம்பட்டி விநாயகர் கோயி லில் கும்பாபிஷேகம் நடந்தது.நவ., 8 யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர் பங் கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.