பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
திருச்சி: அயோத்தி தீர்ப்பு தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பல காலமாக, பலருடைய பக்தி, சேவை, விருப்பம், தியாகம், சகிப்புத்தன்மை, உழைப்பு, திறமை மற்றும் அனைத்து பெரியோர்களின் ஆசிகளால், இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த பணியில், ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் ஆசியுடன், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆர்வமும், முயற்சியும் கவனிக்கத்தக்கவை மற்றும் முக்கியமானவை. இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள், அழகான, ஆச்சாரமான மற்றும் அனுக்கிரகம் வழங்கும் கோவில்களாக வளர்ச்சி அடைவதற்கு, அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் என, அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அந்த கோவில் கள் நிதி, நியமம் மற்றும் நிர்வாகத்தின் அனுகூலத்துடன் முழுமையான முன்னேற்றம் காண, முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.