பதிவு செய்த நாள்
16
ஏப்
2012
11:04
சேலம்: பா.ஜ., நடத்தும் தமிழ்த்தாய் ரத யாத்திரை, 18ம் தேதி சேலம் மாவட்டத்தில் பவனி வருகிறது. பா.ஜ.,வினர் மதுரையில், வரும் 28, 29ம் தேதிகளில், "தாமரை சங்கமம் என்ற மாநில மாநாடு நடத்துகின்றனர். மாநாடு பற்றி தெரியப்படுத்த, பல மாவட்டங்களில் தமிழ்த்தாய் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. வரும் 18ம் தேதி காலை 8.30 முதல் இரவு 8 மணி வரை, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்த்தாய் ரத யாத்திரை நடக்கிறது. ஓமலூர் சின்ன திருப்பதியில் காலை 8.30 மணி, மேச்சேரி 9.30 மணி, சாம்பள்ளி 10.30, நங்கவள்ளி 11.30, தாரமங்கலம் மதியம் 12 மணி, ஓமலூர் மதியம் 1 மணி, கருப்பூர் 1.30 மணி, குரங்குசாவடி மாலை 4 மணி, மூன்று ரோடு 4.30, பள்ளப்பட்டி 5 மணி, லாரி மார்க்கெட் 5.30 மணி, பால் மார்க்கெட் 6 மணி, தேர் நிலையம் 6.30, பட்டாரபயில் 7 மணி, குகை பாலம் 7.30, கருங்கல்பட்டி காய் மார்க்கெட் இரவு 8 மணி, தாதகாபட்டியில் இரவு 8.30 மணிக்கு தமிழ்த்தாய் ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை மாவட்ட மாநாடு பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, வாகன பேரணி பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் செய்கின்றனர்.