அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப். 1 ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் சிரா குத்தியும் அம்மனை வழிபட்டன. 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில், எஸ்.பி.கே., ஆண்கள் பள்ளி செயலர் காசிமுருகன், உறவின் முறை செயலாளர் சரவணன், துணைத்தலைவர் சுரேஷ்குமார், கோயில் டிரஸ்டி கணேசன், எஸ்.பி.கே., பள்ளி தலைவர் ஜெயகணேசன், உறவின் முறை பொருளாளர் கனகராஜ், கல்லூரி செயலர் சங்கரசேகரன் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.