துளசி தரிசனம் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பலனைத் தருகிறது. துளசி மாலை அணிந்து விஷ்ணு பூஜை செய்வது மிகவும் சிறந்தது என்கிறது விஷ்ணு புராணம். "மற்றவர் கொடுத்த அல்லது கடையில் வாங்கிய துளசியை பூஜித்தால் மத்திம பலன் கிடைக்கும். நாமே துளசி செடி வளர்த்து, அதனைப் பறித்து மஹா விஷ்ணுவை பூஜை செய்தால் உலகமே கிட்டும் என்கிறது நாரத புராணம்.