நள மகாராஜாவுக்கு சனிதோஷம் போக்கிய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசிப்பது நல்லது. உங்கள் ஊரிலுள்ள சிவன் கோயிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபட ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். சாதாரண அபிஷேகமும் செய்யலாம். சனிக்கிழமையில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபட்டாலும் நன்மையே.