நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆடை, ஆபரணம், வாகனம் என ஆடம்பர வசதிகளை அருள்பவர். சுகபோகமாக வாழ்பவர்களைக் கண்டால், ‘அவருக்கென்ன... சுக்கிர திசை நடக்குது’ என்பார்கள். அதே நேரம் சுக்கிர தோஷம் இருந்தால் கணவன், மனைவி உறவில் பிரிவு, சுகக்குறைவு, நிதி நெருக்கடி போன்ற கெடுபலன்கள் உண்டாகும். இதற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது, சுக்கிர ஹோரையில் (வெள்ளிக்கிழமை காலை 6:00 – 7:00 மணி) கோயில் வழிபாடு செய்வது நல்லது. சுக்கிரனுக்கு பிடித்த பிச்சி, முல்லை, மல்லிகை மலர்களால் பூஜிக்க வேண்டும். கஞ்சனுார் அக்னிபுரீஸ்வரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்கள் சுக்கிரனுக்குரிய பரிகார தலங்கள்.