சீதையைக் கடத்திய ராவணனை ராமர் கொன்றார். திரவுபதியை இழிவுபடுத்திய துரியோதனனை கிருஷ்ணர் கொன்றார். ராமர், கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணுவே இரண்டு பெண்களையும் காப்பாற்றியவர். மண்ணில் அவதரித்த மகாவிஷ்ணு, திரவுபதியை தங்கையாகவும், சீதையை மனைவியாகவும் ஏற்றுக் கொண்டார். இந்த இரண்டு நிலையிலும் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பளிப்பது மனிதனின் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் இந்த லீலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் நிம்மதியாக வாழ ராம, கிருஷ்ணரை வணங்கி, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்னும் மந்திரத்தை தினமும் சொன்னால் தக்க பாதுகாப்பு கிடைக்கும்.