பதிவு செய்த நாள்
16
ஜன
2025
11:01
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் திருவிழா நிறைவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இல்லற வாழ்வில், ‘ஊடலுக்கு பின், கூடல்’ என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ‘திருவூடல்’ விழா நடந்தது. இன்று திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.